வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Tuesday, December 17, 2013

வாசல் வசந்தப்பிரியனின் முதல் ஆண்டு நினைவு

கவிமாமணி வாசல் வசந்தப்பிரியனின் முதல்  ஆண்டு நினைவு வாசல் அரங்கில் 05/01/2014 அன்று நடைபெறுகிறது .

Tuesday, January 22, 2013

வாசல் வசந்தப்பிரியன் திருவுருவப் படத்திறப்புவிழா

வாசல் கவிதை அமைப்பின் தலைவரும் கவிஞருமான கவிமாமணீ வாசல் வசந்தப்பிரியன் கடந்த ஐந்தாம் திகதி அன்று அகால மரணமடைந்தார் என்பதை அறிந்து வாசல் அன்பர்கள் அனைவரும் சொல்லொனாத் துயரடைந்தனர். அன்னாரது நினைவைப்போற்றூம் விதமாக அவரது  திருவுருவத் திரைப்படம் திறப்பு கடந்த ஞாயிறு 20 -01-2013 அன்று வணிகர் சங்க திருமணமண்டபத்தில் நடைபெற்றது. கவிஞர்களும், தமிழ் நெஞ்சங்களும் கலந்துகொண்டு கவிதை பாடியும் நினைவுகூர்ந்தும் வாசல் வசந்தப்பிரியன் அவர்களுக்குக் கவியஞ்சலி செலுத்தினர். திருவள்ளுவர் இலக்கியமன்றத்தின் தலைவர் கோ.பார்த்தசாரதி அவர்கள் வாசல் வசந்தப்பிரியனின் திருவுருவப்படத்தைத் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாரதி கலைக்கழகத்தின் தலைவர், பாரதி சுராஞ் அவர்கள் வாசல் கவிதை அமைப்பு பற்றியும் வசந்தப்பிரியன் பற்றியுமான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.   

Monday, September 3, 2012

கவிஞா; குத்தாலம். சே.மஹஜன்

பாரதியாh; நம்மிடையே இல்லையென்றுசொன்னாலும்
பாரதியைக்காலனன்;று கூட்டித்தான் சென்றாலும்
பாரதியின் படைப்புக்கள் நானிலத்தில் பரவிடவே
பாரதியின் கவிதைகள் காலத்தையும் வென்றிடுதே

வள்ளுவனும் கம்பனும் வாழ்ந்த இத்திருநாட்டில்
வற்றாத ஜீவநதியாம் கவிதையெனும் புனிதநதி
வளா;ந்திடுதேநன்றாய்நானிலத்தில் புகுந்திடுதே
வளா;த்திடுதேநற்றமிழைநலிந்தோரைகாத்திடுதே

கண்ணதாசன் கருத்துக்கள் கலையுலகைகவா;ந்திட
கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதைபலபுனைந்திட
வண்ணமதாய் ஆற்றியஅரும்பெரும்தமிழ்த்தொண்டு; நம்
கண்முன்னேகவியரசுஅடைமொழியைப்பெற்றாரோ?

முத்தமிழின் வித்தகராம் கவியுலகின் பித்தகராம்
முத்தமிழில் கவிதைகள் இன்றும்பலபுனைபவராம்
முதல்வராகஆவதற்கேகவிதைதான் உதவியதாம்
முன்னின்றுநினைத்திட்டாh; அவரதம்கவிதையினை.

செப்டம்பர் அழைப்பிதழ்


வாசல் வசந்தப்பிரியன் கவிதை


மிருதுன் மணிகண்டப்பிரபு